×

லெனோவா நிறுவனத்தில் வருமானவரித்துறை ரெய்டு

புதுடெல்லி: வருமானவரி மோசடி தொடர்பாக லெனோவா நிறுவனத்தில் நேற்று அதிரடி சோதனை நடத்தப்பட்டது. லேப்டாப், கம்ப்யூட்டர் உள்ளிட்டவைகளை தயாரிக்கும் லெனோவா நிறுவனம் மற்றும் அதன் சில துணை நிறுவனங்களுக்கு எதிராக வரி ஏய்ப்பு புகார் வந்ததை தொடர்ந்து நேற்று வருமான வரித் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

அரியானாவில் உள்ள குருகிராம் மற்றும் கர்நாடகாவின் தலைநகர் பெங்களூருவில் உள்ள லெனோவா நிறுவன வளாகங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறையினருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post லெனோவா நிறுவனத்தில் வருமானவரித்துறை ரெய்டு appeared first on Dinakaran.

Tags : Revenue Department ,Ryd ,Lenovo ,New Delhi ,Rayd ,Dinakaran ,
× RELATED புதுச்சேரி அடுத்த சேதராபட்டு...